Wednesday, August 14, 2013

555 Movie Review

போரடிக்காத விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் என எல்லாமே நல்லா  இருக்குது. அந்த சஸ்பென்சை மட்டும் கொஞ்சம் வெய்ட்டா வச்சிருந்தா ஒரு பட்டாசான ரொமாண்டிக் திரில்லர் கெடச்சிருக்கும்.


ஹீரோ ஹீரோயின் பவர் யோகா விளையாட்டு நல்லா இருந்துச்சு. சந்தானம் காமெடி கொஞ்சம் வந்தாலும் நன்றாக இருந்துது. சந்தானத்தை போட்டு தள்ளிடுறாங்க. இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையில் அது தேவையானதாகவே படுகிறது,


எனக்கு பரத்தை கண்டாலே பிடிக்காது, இருந்தாலும் இந்த படம் என்னை பார்க்க வைத்தது. எழவு பாடல் முதல் முறையாக படத்தில் தான் கேட்டேன். பாடல் வரிகள் காமெடியா இருக்கு.

வில்லன் என் அப்படி பண்றான்னு அந்த சஸ்பென்ஸ் மட்டும்தான் மொக்கையா இருந்துச்சு. இருந்தாலும் அடுத்துவர்ற வர்ற காட்சிகள் நம்மள கன்வின்ஸ் செய்துவிடுகிறது.

Worth watch for one time..

My Rating 3/5

Friday, August 2, 2013

தலைவா- ஒரு pre-release assumption



ஒரு சாதாரண ஆள். அவருக்கு ஒரு காட் பாதர். சில பல antisocial elements-ஆல் பாதிக்க படுற மக்கள் காட்  பாதர் கிட்ட முறையிடுறாங்க.காட்பாதர் மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கிறாரு.அவருக்கு அப்புறம் அவர் வழி வந்த ஹீரோவை மக்கள் அடுத்த காட் பாதரா select பண்றாங்க. 




ஹீரோ சின்ன வயசுங்கிரதாலையும் ஏற்கனவே காட் பாதருங்கிர பெயரில் படம் வந்ததாலயும் மக்கள் அவர தலைவான்னு கூப்பிடுறாங்க. நம்ம ஊர்ல ஸ்டோரி நடக்கிற மாதிரி இருந்தா நம்ம மக்கள் காட் பாதர அய்யான்னுதான் கூப்புடுவாங்க. அந்த பேருலயும் ஒரு படம் இருக்கு. அதனால வழக்கம் போல காட்பாதர்கள் உருவாகும் இடமும் ஒரு தலைவன் இல்லாமல் தவிக்கும் அப்பாவி தமிழ் மக்கள் வாழும் இடமான மும்பையில் நடக்கிறமாதிரிகதை. இதற்கு முன் நாயகன் தளபதி பாட்ஷா மாதிரி படங்களில் வராத கதையும் இசையும் அமைக்கப்பட்டுள்ளது. 

Saturday, July 27, 2013

பட்டத்து யானை - time pass

இந்த படத்துல இவுங்க பண்ணின ஒரே தப்பு படத்த ரொம்ப ஓவரா எதிர்பார்க்க வச்ச டிரைலர்  ரிலீஸ் பண்ணியதுதான். எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் கண்டிப்பா ஒரு நல்ல டைம் பாஸ் படம் நிச்சயம்.


சாதாரண ஒரு காதல்-ஆக்சன் படம் தான் இது. ஆனால் இது வேற மாதிரி காமெடி படம்போல  டிரைலர்ல காட்டிட்டாங்க. அதுவே கொஞ்சம் வினையா போச்சு. 

வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற மாதிரி சில காமெடிகள் இருக்கு. மயில்சாம்யின் இட்லி காமெடி,பிக்பாக்கெட் காமெடி மற்றும் சந்தனத்தின் ஹோட்டல் காமெடி என்று முதல் பகுதி முழுவதுமே காமெடி தான். விஷால் உருகி  உருகி  காதலிக்கிறார். இரண்டாவது பகுதியில் வரும் ஜான்பாபு அண்ட் கோ வின் காமெடி ஒரு முழு நீள  காமெடி படத்துக்குண்டான அனைத்தயும் பூர்த்தி செய்யுது. என்ன ஒரு பாடலும்  டோன்ட்டி டோன்ட்டி பாடலும் நன்றாக உள்ளது.  

என்ன ஸ்டோரிதான் ஒண்ணுமில்லாம படம் தள்ளாடுது. குப்பையை கடைசிவரைக்கும் கிளருன நாய் எதுவும் கெடைக்காம disppoint  ஆனா மாதிரி, நானும் என்கூட படம்பாத்த நண்பரும் திரும்பி வந்தோம். 

my rating: 1.5/5